அதிகாரிகள் நேர்மையாகச் செயல்பட வேண்டும்!

முதலமைச்சர் விஜய் உத்தரவு

மாநகராட்சி, நகராட்சிகளில் நகர அமைப்பு திட்ட அதிகாரிகளுக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பின், நகராட்சி நிர்வாகத்துறைக்கு என தனியாக அமைச்சர் இல்லாமல், அத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முதல்வர் விஜய்.

அத்துறையின் செயலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், நகரமைப்பு திட்ட அலுவலர்கள் என அனைவரும் புதிதாக நியமிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்துறையின் ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் கூறியுள்ளதாவது:

நீங்கள் அனைவரும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்படலாம். அரசியல் ரீதியிலான எந்தத் தலையீடும் இருக்காது.

அப்படி இருந்தால் நேரடியாக செயலர் வழியாக எனக்கு தெரிவுபடுத்தலாம்.

அமைச்சர்கள், ஆளும் கட்சியினர்காக விதியை மீறி, வளைந்து கொடுக்க வேண்டாம். இதை மீறி அதிகாரிகள் தவறு செய்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில், யார் யார் கமிஷன் பெறக்கூடியவர்கள் என்ற பட்டியல் சேகரிக்கும் பணி நடந்து வருவதாகவும், அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பணியிட மாற்றம் விரைவில் நடக்கும் என கூறினார்கள்.

– வைஷ்ணவி பாலு

You might also like