குஜராத்தில் நடைமுறைக்கு வரும் முன்மாதிரி திட்டம்!

செய்தி:

இந்தியாவில் முதன்முறையாக சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகம்!

– இனி வாகனங்களை நிறுத்த வேண்டியது இல்லை.

கோவிந்த் கமெண்ட்:

நல்ல திட்டம்தான். இந்த நடைமுறை இந்தியாவின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்டால், வாகனங்கள் டோல்கேட்டில் நீண்ட நேரம் நிற்கும் கஷ்டங்கள் இருக்காது. டோல்கேட் கட்டணத்தை செலுத்துவதும் சுலபமாகிவிடும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முன்பு டோல்கேட் முன் போராட்டம் நடத்தியதைப்போல, போராட்டம் நடத்த வேண்டிய அவசியமும் இருக்காது.

ஆனால் இம்மாதிரியான சோதனை முயற்சிகளெல்லாம், குஜராத்தில் துவங்குவதுதான் பாஜகவின் நடைமுறை எதார்த்தமாய் இருக்கிறது.

You might also like