தேசிய பட்டாம்பூச்சி நாள் இன்று (மார்ச் 14) அனுசரிக்கப்படுகிறது.
பட்டாம் பூச்சிகள் வலசை போகும் வசந்த காலமும் கோடை காலமும் மிக அருகில் இருப்பதால், தேசிய பட்டாம்பூச்சி நாளான இன்று அவற்றைப் பற்றிய சில முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.
பட்டாம்பூச்சிகளின் கண்கள் நூற்றுக்கணக்கான நுண்ணிய லென்ஸ்களால் ஆனவை. அவற்றால் 12 அடி தூரம் வரை பார்க்க முடியும்.
பட்டாம்பூச்சிகளின் நாக்கு புரொபோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. அவை ஸ்டிரா போல் நீண்டு பூக்களில் இருந்து தேனை எடுக்க பட்டாம்பூச்சிகளுக்கு உதவுகிறது.
பட்டாம்பூச்சிகள் உணவை உறிஞ்சி உண்பதால், அவற்றால் தேன் உள்ளிட்ட திரவ வடிவிலான உணவுகளை மட்டுமே உண்ண முடியும்.

பட்டாம்பூச்சிகளுக்கு மூக்கு கிடையாது. அதனால் அவை கால்களின் மூலம் உணவின் சுவையை நுகர்கின்றன.
ஒரு பெண் பட்டாம்பூச்சி பல்வேறு தாவரங்களின் மீது அமர்ந்து, அந்தத் தாவரம் அதன் சாற்றை வெளியிடும் வரை தனது கால்களால் இலைகளைத் தட்டுகிறது.
அவை சாற்றை வெளியிட்டதும், காலால் நுகர்ந்து அவை உண்ணத்தக்கதா, முட்டையிட ஏற்ற இடமா என்பதை அறிந்துகொள்கிறது.
பட்டம்பூச்சிகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. அவை 2 முதல் 4 வாரங்கள் மட்டுமே உயிர்வாழும்.
உயிரோடு இருக்கும் காலத்தில் உண்பது, இனச்சேர்க்கை செய்வது ஆகிய விஷயங்களையே பட்டாம்பூச்சிகள் அதிகமாக செய்யும்.
பட்டாம்பூச்சிகள் என்றாலே அவை சிறிய அளவில்தான் இருக்கும் என்று நாம் நினைத்திருப்போம்.
ஆனால், சில வகை பட்டாம்பூச்சிகள் 12 அங்குலம் வரை வளரும் தன்மையுடையவை.
சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை மட்டுமே பட்டாம்பூச்சிகளால் பார்க்க முடியும்.
பட்டாம்பூச்சிகளால் மணிக்கு 12 மைல் முதல் 25 மைல் வேகத்தில் பறக்க முடியும்.

அண்டார்டிகா கண்டத்தைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் பட்டாம்பூச்சிகள் உள்ளன.
உலகில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
பிரிம்ஸ்டோன் எனப்படும் பட்டாம்பூச்சி, மிக அதிகபட்சமாக 10 மாதங்கள் வரை உயிர்வாழும்.
தங்கள் உடல் வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் குறைந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது.
பட்டாம்பூச்சிகள், தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் மூச்சுவிடும்.
– ராதா