வாசிப்பின் ருசி:
இரைச்சலுக்கும்
அவசரத்திற்கும் நடுவே
அமைதியாகச் செல்;
மௌனத்தில் எவ்வளவு
அமைதி இருக்கக்கூடும்
என்பதை நினைவில் கொள்.
உன்னை நீ மற்றவர்களோடு
ஒப்பிட்டுப் பார்க்காதே,
அதனால்
நீ வீணானவனாகவும்
அல்லது கர்வமுள்ளவனாகவும்
மாறக்கூடும்.
உன் சாதனைகளையும்
திட்டங்களையும் போலவே
உன் அமைதியையும் ரசி!
– டெசிடெராட்டா