புயலுக்குப் பிறகு வந்து மௌனமாக அமரும் மணல் காற்று.
முதுமையில் வரும் மௌனம் பலவீனம் அல்ல. அது மெய்யறிவு.
எப்போது பேச வேண்டும். எப்போது வெறுமனே தலை அசைத்துப் புன்னகைக்க வேண்டும் என்று புரிந்து வைத்திருக்கும் மெய்யறிவு.
வாழ்க்கை அமைதி எனும் மொழியில் மற்றவர்களுடன் பேசத் தொடங்குகிறது.
மற்றவர்களிடம் இனியும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லாத புனிதமான பருவ காலம் இது என்று உணர்கிறேன்.
மற்றவர்களால் நான் நேசிக்கப்படுவதை விட, என்னை நானே நேசித்துக் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் உணர்ந்து கொண்ட பருவ காலம் இது.
எனது உள்ளுக்குள் திரும்பும் காலம் வந்துவிட்டது.
எனது சங்கீதத்தை நானே ரசிக்கும் காலம் வந்து விட்டது.
என் இதயம் இதுவரை என்னிடம் சொல்ல நினைத்தது எல்லாம் இப்போது முதுமையின் தனிமையில் செவி கொடுத்துக் கேட்கிறேன்.
இப்போது எனக்கு நிச்சயமாகத் தெரியும் ஒரே உண்மை, எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான்.
– கலை விமர்சகர் இந்திரன்