மர்மமான சில நிகழ்வுகளும் அதிர்ச்சியூட்டும் பின்னணியும்!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில், இதுவரை நிகழாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சார்ந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதை செய்திகளாகப் பார்க்க முடிகிறது.

சிறு பெண்கள் உட்பட பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.

சில இடங்களில், குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வந்து பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிவிட்டுப் போகிறார்கள். 

தமிழக அமைச்சரே சொல்கிறபடி, தமிழகத்தின் பல பகுதிகளில் சில கருப்பு ஆடுகளின் தலையீட்டால் ஆங்காங்கே மின்வெட்டு நடந்து, மக்கள் அதற்காக போராட்டமே நடத்துகிறார்கள்.

மாநில அரசு விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகையைத் தள்ளுபடி செய்வதாக சொன்னாலும் முழுக் கடனையும் தள்ளுபடி செய்யச் சொல்லி விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்.

டாஸ்மாக் பணியாளர்களும்கூட போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதும் ஏன் இம்மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன என்பது பற்றிய முறையான ஆய்வு இங்கு நடந்திருக்கிறதா?

எப்படி இங்கு முகமூடி அணிந்த மர்ம நபர்களின் போர்வையில் கருப்பு ஆடுகளும் செயல்பட முடிகிறது.

தமிழகத்தில் அண்மையில் நடந்த பல வன்முறைச் சம்பவங்களில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்கும் பாய்ந்திருக்கிறது. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் பின்னணியில் இருப்பது யார்?

இந்த நிகழ்வுகள் எல்லாம் தற்செயலாகத்தான் நடக்கிறதா? அல்லது பொம்மலாட்டம் மாதிரி நடத்தப்படுகிறதா?

தமிழகத்தில் இப்படிப்பட்ட குற்றங்கள் எப்படி அணிவகுத்து நடக்கின்றன என்பதை, தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, மிகக் கனவமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது நிகழ்காலத்தின் அத்தியாவசியத் தேவை.

இதைத் தடுக்கவில்லை என்றால் ஊடகங்களும் சமூக வலைதளங்கும் தினந்தோறும் குற்றப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

– லியோ

You might also like