கூடலூர் நிலப்பிரச்சனைக்கு தீர்வு, டேன்டீ மக்களுக்கு நிரந்தர தீர்வாக டேன்டீ நிலத்தை பிரித்துக் கொடுப்பது, அதே நிலத்தில் 14 லட்சத்தில் சொந்த வீடு கட்டிக் கொடுப்பது,
தேயிலைக் கொழுந்துக்கு ரூபா 35 கொடுப்பது, தேயிலைப் பொடி கிலோவுக்கு ரூபா 200 கொடுப்பது மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் பிரச்சனைகளைத் தீர்க்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை VTMS-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு M.S. செல்வராஜ் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் நேரடியாகச் சந்தித்து உரையாற்றினர்.
இந்த சந்திப்பு கடந்த 13.01.2026 அன்று சென்னையில் டாக்டர். கலைஞர் செம்மொழிப் பூங்காவில் நடைபெற்றது. விவசாயிகள் விளைவித்த வேளாண் பொருட்கள் முதல்வருக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
இதில் எம்.எஸ்.செல்வராஜ் எழுதிய “மறைக்கப்பட்ட மலையக தமிழர்களின் வீர வரலாறு” நூலினை முதல்வர் ஆர்வத்தோடு பெற்றுக்கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
வேளாண்மை துறை அமைச்சர் மாண்புமிகு திரு M.K.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. K.N. நேரு அவர்களும் கலந்து கொண்டனர்.
முதல்வர் மற்றும் அனைவருக்கும் தமிழர்களின் திராவிடப் பொங்கல் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

