பயணிகளுக்கு வாழ்த்துகள் சொல்லும் ‘ரோபோ’ நாய்!

செய்தி:

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளை வரவேற்கும் வகையில், நுழைவாயில் பகுதியில் நாய் வடிவிலான குட்டி ‘ரோபோ’ ஒன்று பயணிகளுக்குக் கை குலுக்கி வரவேற்று பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து வருகிறது.

கோவிந்த் கமெண்ட்:

பல பகுதிகளில் உயிருள்ள நாய்கள் விரட்டி விரட்டி மனிதர்களை செம்மையாய் கடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு பதிலீடாக இப்படி ஒரு செட்டப்பை ஏற்பாடு பண்ணி வாழ்த்துச் சொல்ல வைத்திருக்கிறார்கள்.

நல்லவேளை ‘ரோபோ’ நாய் குறைக்கவுமில்லை, கடிக்கவுமில்லை.

‘ரோபோ’க்கள் ‘ரோபோ’க்கள் தான்.

You might also like