செய்தி:
சென்னையில் பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் டன்னுக்கு ரூ.5000 அபராதம்.
– மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டு எல்லைக்குள் வந்து கொட்டுகிறார்கள்.
அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
தற்போது கட்டுமானக் கழிவைக் கொட்டினால் அபராதம் என்று அறிவித்திருக்கிறீர்கள்.
மாநில தலைநகரான சென்னையிலேயே நிறைய இடங்களில் இத்தகைய கழிவுகள் கொட்டப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
இதில் எந்த அளவுக்கு அபராதம் போட்டு இத்தகைய கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்தப் போகிறார்கள்? பார்ப்போம்.