த.வெ.க இப்படித்தான் வளர வேண்டுமா?

செய்தி:

அதிமுக முக்கிய நிர்வாகிகள் விரைவில் த.வெ.க-விற்கு வரவுள்ளனர்.

– செங்கோட்டையன் பேட்டி.

 கோவிந்த் கமெண்ட்:

அதிமுகவிலிருந்து அதிரடியாக விலக்கப்பட்டு, டெல்லிக்குப்போய் பாஜக தலைவர்களை எல்லாம் சந்தித்து ஆறுதல் அடைந்த பிறகு, சாவகாசமாக த.வெ.க-வுக்குள் நுழைந்து, ஈரோட்டில் த.வெ.க மாநாட்டையும் நடத்திக் காட்டியவர்.

இப்போது அதிமுகவிலிருந்து ஆட்களை இழுப்பதிலும் படுவேகமாக இருப்பார் போலிருக்கிறது.

பழைய விசுவாசத்துடன் அதிமுகவிலிருந்து சில தலைகளையும் இழுத்து இப்படியெல்லாம் த.வெ.க-வை செங்கோட்டையன் பலப்படுத்த வேண்டுமா?

 
You might also like