தன் படைப்புகளுக்கு கருத்துகளை சேகரிக்க ஓரிரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.
இத்தாலிக்கு சென்றவர், ‘ஆன்டிகிறிஸ்ட்ஸ் மிராக்ளர்’ என்ற புத்தகத்தை எழுதினார். தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார். 1902-ல் வெளிவந்த ‘ஜெருசலேம்’ என்ற நூல் அமோக வரவேற்பை பெற்றது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1909-ல் பெற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ஏற்கெனவே வறுமையால் விற்ற வீட்டைத் திரும்ப வாங்கினார்.
இரண்டாம் உலகப் போருக்கு நிதி திரட்டுவதற்காக தனது நோபல் பரிசு பதக்கம், ஸ்வீடன் அகாடமியின் தங்கப்பதக்கத்தை பின்லாந்து அரசுக்கு அனுப்பினார்.
இதில் நெகிழ்ந்துபோன பின்லாந்து அரசு வேறு வழிகளில் நிதி திரட்டி இவரது பதக்கங்களை இவரிடமே வழங்கியது.
ஸ்வீடன் இலக்கியக் கழகத்தின் தங்கப் பதக்கத்தை 1904-ல் பெற்றார். 1907-ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
ஜெருசலேம் நகரில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. ஜெருசலேம் உள்ளிட்ட இவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டன.
1858 நவம்பரில் பிறந்த செல்மா, 1940, மார்ச்சில் தனது 81-வது வயதில் மறைந்தார். அவர் வாழ்ந்த வார்ம்லாண்ட் இல்லம், இன்று அவருடைய நினைவிடமாக உள்ளது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையை வென்று, சுய முயற்சியாலும் அபாரத் திறமையாலும் உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக பரிணமித்தார் செல்மா லேகர்லாவ்.