மக்களின் மனங்களைப் படித்தவர் காமராஜர்!

பேரறிஞர் அண்ணா சொன்ன விளக்கம்

“காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர – வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர். மக்களின் புன்னகையை – பெருமூச்சை – கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார்.
 
முப்பது ஆண்டு – நாற்பது ஆண்டு – என்று மக்களிடம் தொண்டாற்றினால்தான் இந்தப் பாடத்தைப் பெறமுடியும்.
 
வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு பூமியின் அழுத்தத்தால் கீழே அடங்கி நடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்.
 
அதுபோல, நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து தோன்றிய வைரமணிகளிலே ஒருவரே காமராசர்.”

 

‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து… 

You might also like