செய்தி:
‘ஆபரேஷன் புளுஸ்டார்’ நடவடிக்கை தவறான முடிவு.
– ப. சிதம்பரம் கருத்தால் சர்ச்சை
கோவிந்த் கமெண்ட்:
ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன்பு, 1984-ம் ஆண்டில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, நடந்த ‘ஆபரேஷன் புளுஸ்டார்’ நடவடிக்கைக்கு இவ்வளவு காலம் கழித்து தன்னுடைய பாணியில் விமர்சனத்தை முன்வைத்து சலசலப்பை உருவாக்கியிருக்கிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம்.
இதே மாதிரி தற்போது மோடி ஆட்சியில் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, யார் விமர்சிக்கப் போகிறார்களோ, தெரியவில்லை.
எப்படியோ, ஆபரேஷன் முன்னே, தாமதமான விமர்சனம் பின்னே என்பதுதான் அரசியல் நியதி போலிருக்கிறது.