கற்பனையா, நிஜமா?:
*****
செய்தியாளர் கேள்வி: உங்க முதல் பிரச்சாரப் பயணம் எப்படி இருந்துச்சு?
த.வெ.க. தம்பி பதில்: பிரச்சாரத்துக்குப் போடப்பட்ட நிபந்தனைகளைப் பார்த்ததுமே மிரட்டலா இருந்துச்சுங்கண்ணா… நல்ல வேளை ஒரு சினிமா டைட்டில் மாதிரி, ‘வாயை மூடி பேசவும்’ணு மட்டும் தான் சொல்லல.
செய்தியாளர் கேள்வி: தொண்டர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருந்துச்சுங்கண்ணா?
த.வெ.க. தம்பி பதில்: அதை ஏன் கேக்குறீங்க… பிரச்சாரத்துக்காக நாம ஒரு திட்டம் போட்டா… தொண்டர்கள் ஒரு திட்டம் போடுறாங்க… அதனால போலீஸ் சொன்னபடியெல்லாம் கரெக்டா போக முடியலங்கண்ணா…
செய்தியாளர் கேள்வி: பல தடைகளை மீறி நீங்க மைக்ல பேசினப்ப, அந்த மைக் கூட ஸ்ட்ரைக் பண்ணுச்சு… அது ஏனுங்கண்ணா?
த.வெ.க. தம்பி பதில்: கரெக்டா காது கொடுத்து கவனிச்சுருக்கீங்க… நான் நடிச்ச திரைப்படத்திலகூட அடுத்தக் காட்சிய என்னால எதிர்பார்க்க முடியும். அரசியல்ல அப்படி எதிர்பார்க்க முடியலங்கண்ணா…
செய்தியாளர் கேள்வி: சினிமால இருந்து அரசியலுக்கு வந்த பிறகு இதைப்பத்தி இப்ப என்ன நினைக்கிறீங்க?
த.வெ.க. தம்பி பதில்: இதுக்கு தங்கவேலு பாணியில் தான் பதில் சொல்லணும். அரசியலே ஒரே சோகங்கண்ணா, எங்க பார்த்தாலும் ஒரே உள்குத்தா இருக்குங்கண்ணா…