கவிஞர்.கதிர்வேல்: இணையத்தைக் கலக்கும் உலக சாதனையாளர்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜடையனூர் கிராமத்தைச் சார்ந்த எழுத்தாளர், பேச்சாளர், வசன கர்த்தா, உதவி இயக்குநர் உள்ளிட்ட பல பரிமாணங்களைக் கொண்டவர் கவிஞர்.கவிதை கதிர்வேல்!

மருத்துவமனையில் செவிலியராக இருந்த இவர், தளபதி விஜய் அவர்களின் மேல் கொண்ட தீராதக் காதலால் திரைத்துறையில் கால் பதித்தார்.

நடிகராக, இயக்குனராக, வசனகர்த்தாவாக பணி புரிந்திருக்கிறார்.

தன் எழுத்துக்களால் இலக்கிய உலகை ஈர்த்து வரும் இவர், தமிழக அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருது பெற்றவர்.

அதோடு, அகத்தியர் விருது, பாரதிநேசன் விருது, கவிச்செம்மல் விருது, நல்லாசான் விருது, அப்துல் கலாம் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்!

இதற்காக சர்வதேச தமிழ்ப் பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இளைஞர்களின் கனவு நாயகன் APJ அப்துல் காலம் அவர்களின் கனவைச் சுமக்கும் மாணவனான கவிஞர்.கதிர்வேல் 2020 ஆம் ஆண்டு 2020 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தன் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ படத்தை முடித்த பிறகு திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்!

இந்த நிலையில், தீவிர விஜய் ரசிகரான கவிஞர்.கதிர்வேல், விஜய்க்காக தொடர்ந்து 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதையை எழுதி இரட்டை உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்காக பல்வேறு நேர்காணல்கள், பேட்டிகலிலும் பங்கேற்று வருகிறார்.

விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய மறுகனமே கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார்.

விஜய்க்காக இவர் செய்த உலக சாதனையைப் பாராட்டி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா,

கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், தவெக பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் லயோலா மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் ஏராளமான மாவட்ட செயலாளர்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.

பல்வேறு தவெக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் கவிஞர்.கதிர்வேல், தமிழக வெற்றிக் கழக கொள்கைகளைப் பல்வேறு மேடைகளில் பரப்பி வருகிறார்! 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் 51வது பிறந்தநாளுக்காக 51 நிமிடங்கள் இடைவிடாது வாசித்த கவிதை இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தலைவர்.தளபதியின் பிறந்தநாள் விழா செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டத்தில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய கவிஞர்.கதிர்வேலின் பேச்சு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது!

“என்னை தளபதிக்காக அர்ப்பணித்ததைப் போல, என் எழுத்தை தமிழக வெற்றிக் கழகத்திற்கு அர்ப்பணிக்கிறேன். 2026 தமிழக சட்மன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்து தலைவர்.தளபதி முதல்வராக வேண்டி கடுமையாக உழைப்பதே என் முழுநேர வேலை. என் ஒரே கனவு, தலைவர் தளபதியிடம் நான் படைத்த உலக சாதனைக் கவிதையைக் கொடுத்து ஆசி பெறவேண்டும் என்பது தான்” என்கிறார் கவிஞர் கதிர்வேல்.

இவரின் கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்!

– எஸ். செல்வம்

 

You might also like