வெற்றி பெற்றுவிட்டோம் என இறுமாப்பு கொள்ளத் தேவையில்லை!

பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணாவின் ஒரு அனுபவம்:

1967 ஆம் ஆண்டு.

அண்ணா முதல்வராகப் பதவி ஏற்று சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு வந்த போது, அங்கிருந்த அதிகாரிகளிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று யாரும் இறுமாப்பு கொள்ளத் தேவையில்லை. நமக்கு வாக்களித்த மக்களில் பத்து சதவிகிதம் பேர் இன்றைக்கே நமக்கு எதிரான மனநிலைக்குத் திரும்பி விட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு நாம் பணியாற்றத் துவங்க வேண்டும்”.

அண்ணாவின் எச்சரிக்கை அவருடைய தம்பிகள், அவர் வழி வந்தவர்கள் அனைவருக்குமானது!

 

You might also like