இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு!

மார்ச் மாதம் ரூ.1.78 லட்சம் கோடியாக வசூல்

புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த விவரங்களை ஒன்றிய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச வசூலாகும்.

2023-24-ம் நிதியாண்டுக்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது.

இதுவரை ஜிஎஸ்டி வசூலில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஈட்டப்பட்டதே முதலிடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர திரும்ப செலுத்தப்பட்ட தொகை ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட 18.4 சதவீதம் அதிகம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like