திரும்பப் பெறப்பட்ட 97.69 சதவிகித ரூ.2000 நோட்டுகள்!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த மே 19-ம் தேதி, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.69 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும் 8,202 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

You might also like