தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்ப வாபி ஏரியை, ‘சிவப்பு கடல்’ என்று அழைக்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை, 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன.
இந்த ஏரியில் பூத்திருக்கும் செந்தாமரைகளைக் காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள்வருகிறார்கள்.
செந்தாமரைகளைப் பார்ப்பதற்கு அதிகாலை ஏற்ற நேரம். பூக்கள் முழுவதுமாக விரிந்திருக்கும். அதனால் பகல் முழுவதும் இந்த ஏரி பரபரப்பாகவே இருக்கிறது.
சிறிய கட்டுமரம், படகுகளில் செந்தாமரைகளுக்கு நடுவே சுற்றி வரலாம்.
புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஏரி பெரிதாக இருந்தாலும் ஒரு மீட்டர் ஆழமே கொண்டது.
பாவோ நதியில் இருந்து ஏரிக்குத் தண்ணீர் வருகிறது.
5 மாதங்கள் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளை வைத்தே இந்த மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது.