இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்!

– மத்திய அரசு விளக்கம்

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சுகாதாரத் துறை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, “தேசிய மருத்துவக் கவுன்சில் (என்எம்சி) வழங்கிய தகவலின்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மாநில மருத்துவக் கவுன்சில்கள் மற்றும் தேசிய மருத்துவக் கவுன்சிலில் 13,08,009 அலோபதி (ஆங்கில மருந்து முறை) மருத்துவா்கள் பதிவு செய்துள்ளனா்.

பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவா்களில் 80 சதவிதம் மற்றும் 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவா்கள் உள்ளனா் என்று வைத்துக் கொண்டாலும், நாட்டில் மருத்துவா் – மக்கள் தொகை விகிதம் 1 : 834-ஆக உள்ளது.

இது உலக சுகாதார மையத்தின் தரமான 1 : 1000 விகிதத்தைவிடச் சிறந்தது.

மேலும், நாட்டில் 34.33 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியா்களும், 13 லட்சம் துணை மற்றும் சுகாதாரப் பணியாளா்களும் உள்ளனா்.

நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன் 387-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 82 சதவீதம் அதிகரித்து 706-ஆக உள்ளது.

இதன்மூலம், கடந்த 2014-க்கு முன் 51,348-ஆக இருந்த இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களின் எண்ணிக்கை தற்போது 112 சதவீதம் அதிகரித்து, 1,08,940-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 2014-க்கு முன் 31,185-ஆக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் தற்போது 127 சதவீதம் அதிகரித்து, 70,674-ஆக உள்ளது” என்றாா்.

#எம்பிபிஎஸ் #மருத்துவப்_படிப்பு #மருத்துவக்_கல்லூரி #செவிலியா்கள் #சுகாதாரப்_பணியாளா்கள் #மருத்துவா்கள் #நாடாளுமன்ற_பட்ஜெட்_கூட்டத்தொடர் #சுகாதாரத்_துறை #உலக_சுகாதார_மையம் #மருத்துவ_கவுன்சில்கள் #அலோபதி #MBBS #Medical_Course #Medical_College #Nurses #Health_Workers #Doctors #Parliamentary_Budget_Session #Health_Department #World_Health_Center #Medical_Councils #Allopathy

You might also like