மண் பாத்திரத்தின் மகத்துவம்!

இன்று நவீன யுகத்தில் நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது.

குறிப்பாக ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் அவை கேள்விக்குறியாக தான் உள்ளது.

நமது முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். நோய்கள் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்று என்றாவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா? அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு மிக எளிதில் விடை கிடைக்கும்.

இன்று சமையல் அறைகளில் அதிக அளவு பயன்படுத்தப்படும் அலுமினியக் குக்கர்கள் அனைத்தும் உடலுக்கு பாதகம் செய்யக்கூடிய பொருட்கள் தான் என்பது உங்களுக்கு தெரியாதா?

இதனால் ஏற்படுகின்ற பல விளைவுகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். குறிப்பாக அதிகரித்து இருக்கும் புற்று நோய்களுக்கு காரணமாக கூட இவற்றை நாம் கூறலாம்.

ஆனால் நமது முன்னோர்கள் பயன்படுத்திய மண் பானைகள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்தது.

அறிவியல் வளராத காலத்தில் அவர்கள் எப்படி இந்த மண் பானைகளை சமைகளுக்குப் பயன்படுத்தினார்கள், என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆரம்பகாலத்தில் நமது முன்னோர்கள் பெரும்பாலும் மண் பாத்திரங்களை தான் சமையலுக்குப் பயன்படுத்தினார்கள்.

இந்த மட்பாண்டங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாகவும், ஒரே சீராகவும் பரவுவதால் சத்துக்கள் அழியாமல் சமைக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் மண் பாத்திரங்களில் இருக்கும் நுண் துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவதால் சரியான பதத்தில் வைட்டமின்கள் நம் உடலுக்கு கிடைக்கும்.

மேலும் மண் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுகள் பல மணி நேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது எண்ணெய் பயன்பாடும் குறைவாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு ஒன்று… முருங்கைக் காம்புகளைச் சிறிதாக நறுக்கி தண்ணீரில் அலசி மண்சட்டியில் நன்றாக வேகவைத்து கடைந்து சிறிது மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து குடித்துவாருங்கள்.

ஒரு மாதம் கழித்து உங்கள் கால்சியம் அளவையும் பரிசோதியுங்கள். மருந்தாவது, மாத்திரையாவது. மண்சட்டி போதும் என்று சொல்வீர்கள்.

அறுசுவையான உணவு ஆரோக்கியமாய் கிடைக்க மண்பாத்திரங்களில் சமைக்கும் சமையலே சிறந்தது என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். நாமும் அதைப் பின்பற்றுவோம்.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.

You might also like