பிறந்ததற்காக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போ!

– விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள்

* மதத்திற்காகச் சச்சரவு செய்வது வெறும் பழத்தோலுக்காக சண்டையிடுவதற்கு ஒப்பானது.

* சாத்திரத்தை எல்லாம் தூக்கிக் குப்பையிலே போடு. முதலில் நாட்டு மக்கள் உயிரோடு வாழக் கற்றுக் கொடு. பிறகு பாகவதம் படிக்கச் சொல்.

* ஒவ்வொரு வேலையும் புனிதம் தான். உலகத்தில் எந்த வேலையும் கீழானது என்று சொல்ல உனக்கு உரிமை இல்லை; துப்புரவுத் தொழிலாளியின் வேலைக்கும், அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்யும் அரசனின் வேலைக்கும் எந்த வேற்றுமையும் இல்லை.

* மனதுக்குப் பிடித்தமான வேலை கிடைத்தால் அதை மூடனாலும் செய்ய முடியும். எந்த வேலையையும் தன் மனதுக்குப் பிடித்தமானதாகச் செய்து கொள்பவனே அறிவாளி.

* பிறந்து விட்டாய். ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போ.

* முதலில் மனிதனாக இரு. பிறகு மதம் சார்ந்தவனாக இருக்கலாம்.

* உண்மையான முன்னேற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நிகழும். ஆனால் நிச்சயமாக நிகழும்.

* நம்முடைய முக்கியமான வேலை – நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது தான். நாம் முன்னேற வேண்டும் என்றால், முதலில் நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

– நன்றி: நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடான அநிர்வாண்ராய் எழுதிய ‘வழிகண்ட சுவாமி விவேகானந்தர்’ என்று நூலில் இருந்து ஒரு பகுதி.

You might also like