தலைமைப் பண்புடைய இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்!

ஐ.நா-வில் ஒலித்த குரல்!

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர்.அட்லின் ஹெலன் பால்பாஸ்கர், ஐக்கிய நாடுகள் (UN) சபையின் மூலம் (17.09.2020) ஏற்பாடு செய்யப்பட்ட பாலின சமத்துவ உறுதிப்படுத்தும் பெண்கள் தலைவர்களின் உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டு பின்வருவனவற்றைக் கூறினார்.

“ஒவ்வொரு நிமிடமும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் அதிகரித்து வருவதால், இளைஞர்கள் தலைமையில், மாறுபட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பங்களிப்பை உறுதி செய்வது முக்கியமாகும். இது சமத்துவமான சமுதாயத்தை அடைய வழி வகுக்கிறது.

தலைமைத்துவத்தை, குறிப்பாக இளம் தலைமுறை பெண்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை உருவாக்குவதில் மூலமே நிலையான வளர்ச்சிக்கான பாதையை அடைய முடியும்.

COVID-19-ஐ வெற்றிகரமாக கையாளுவதன் மூலம் பெண்கள் தலைமையிலான நாடுகளில் இது சாத்தியமாகிவிட்டாலும், சமமான எண்ணிக்கையிலான பெண்களைத் தலைமைத்துவத்தில் காண இது இன்னும் நீண்ட வழி என்று தெரிகிறது. இதைப் பற்றி நாம் என்ன செய்யப் போகிறோம்?

இதற்கான பதில், “சமூக, அரசியல் மற்றும் கலாச்சார மட்டத்தில் தலைமைப் பண்புடைய இளைஞர்கள் பங்கேற்பதே ஆகும்”.

You might also like