முக அழகை மெருகேற்றும் வால்நட் எண்ணெய்!

அழகை விரும்பாத நபர்கள் இங்கு யாரும் கிடையாது. இளமையாக இருக்கவும், அழகை மெருகேற்றிக் கொள்ள என்னவேனாலும் செய்ய தயாராக இருப்போம்.

முக அழகை கூட்டும் எத்தனையோ செயற்கை கிரீம்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்து கொள்ள நாம் யாரும் தயாராக இல்லை.

அழகை அதிகரிக்க எத்தனையோ இயற்கை வழிகள் இருக்கின்றன. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவான வால்நட்டில் உங்கள் இளமையை மீட்டு எடுக்கும் ரகசியம் ஒளிந்திருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? வால்நட் உடல் அழகின் பங்கு என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

வால்நட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடல் வனப்பு, மற்றும் சரும சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கிறது.

வால்நட்ஸ் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கிறது.

இது சரும பிரச்சனைகளிலிருந்து உங்கள் தோலை பாதுகாத்து முகத்தை பொலிவாக்க உதவுகிறது.

இந்த வால்நட்ஸ் எண்ணெயின் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். தோல் வல்லுநர்கள் கூற்றுப்படி வால்நட் ஒரு உடல் அழகை மெருகேற்றும் அற்புதமான ஒன்று எனக் கூறுகின்றனர்.

மொதுவாக வால்நட் பருப்பு உடலின் ராஜாவான இதயத்திக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளன.

இது உங்கள் சருமத்தை சூரிய ஒளியின் தீவிர சேதத்தில் இருந்து தடுக்க உதவுகிறது. 35 வயதுக்கு மேல் இருப்பவர்கள் முகத்தில் மெல்லிதான சுருக்கம் எட்டிப்பார்க்கும்.

சருமத்தை பாதுக்காக விரும்பினால் காலையில் ஒரு பத்து வால்நட் பருப்புகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

முகம் உடல் முழுவதும் வால்நட் எண்ணெயை எடுத்து மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பனி நேரத்தில் ஏற்படும் வறட்சி நீங்கி தோல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

இரவு நேரத்தில் முகத்தில் எண்ணெய் தடவி காலை எழுந்து கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி,சுருக்கம், நீங்கி முகத்தின் அழகு மெருகேரும்.

தொடர்ந்து பயன்படுத்தும் போது வறண்ட சருமத்தை நீக்கி சருமத்தை மேற்பரப்பை ஈரப்பதமாக்குகிறது மற்றும் தோல் பலப்படுத்தி தளர்ந்து போகாமல் பாதுகாக்கிறது.

சுற்றுச்சூழல் மாசிலிருந்து சருமத்தை பாதுகாத்து இறந்த செல்களை முகத்தில் இருந்து நீக்குகிறது. முகத்திற்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த எண்ணெய் நீர் இழப்பை தடுக்கும். வயதான அறிகுறியை குறைக்கிறது, தோலை மென்மையாக்கும் பண்புகளை கொண்டது.

இது மாசு மற்றும் சூரிய ஒளி , சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து ஆக்ஸிஜனேற்றியாக முகத்தைப் பாதுகாக்கிறது.

மேலும், மாசு காரணமாக ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சியிலிருந்து தீர்வை கொடுக்கிறது.

வால்நட் எண்ணெய் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

வால்நட் – 1 கப்

உப்பு – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

முதலில் வால்நட் பருப்புகளை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கனமான இரும்பு வாணலியை சூடு செய்ய வேண்டும். அரைத்த வால்நட் பருப்புக்களை அதில் சேர்க்கவும். மிதமான சூட்டில் அரைத்த பருப்புகளை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதன் பிறகு உப்பு சேர்த்து கிளறவும். தண்ணீர் கொஞ்சமாக தெளித்து கிளரவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை நிறுத்தி விட வேண்டும். சூடு ஆறியதும் கையால் அல்லது துணியால் பிழிந்து எடுக்கவும்.

இப்போது வால் நட் எண்ணெய் தயார்.

தினமும் வெளியில் செல்லும் முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தில் எண்ணெய் தேய்த்து விட்டு பிறகு கிரீம் பயன்படுத்த வேண்டும்.

முகப்பரு, ஆயில் ஸ்கின் இருப்பவர்கள் இந்த எண்ணெயை தவிர்க்க வேண்டும்.

மருத்துவர்களின் பரிந்துரைக்குப் பிறகு பயன்படுத்தலாம்.

தற்போது வால்நட் எண்ணெய் சந்தையில் கிடைக்கின்றன. அவை அதிக அளவு கெமிக்கல் இல்லாதவையாக பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.

கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை விடவும் இயற்கையாக கிடைக்கக்கூடிய வால்நட் அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது.

எனவே விளம்பர மோகத்தில் சிக்காமல் முகத்தை ஜொலிக்க வைக்க கொஞ்சம் நேரம் எடுத்து பராமரித்தால் நீங்களும் அழகு ராணிகள் தான்.

– யாழினி சோமு

You might also like