தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன் பட அனுபவம்:
ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே, அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது.
குறிப்பாக உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு, சம்பவம் நடைபெற்ற அசலான இடங்களில் படமாக்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் வழிகாட்டுதலின்கீழ் கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரிக்கிறார்.
படத்தின் முன்தயாரிப்பை தொடங்குவதற்கு ஒரு புதிய அணுகுமுறையை கையாண்டுள்ளனர்.
‘NC23’ படக்குழுவினர் ஆந்திராவின் கடலோரப் பகுதியை ஆய்வு செய்து, ஸ்ரீகாகுளத்தில் உள்ள கே. மச்சிலேசம் எனும் கிராமத்திற்கு சென்றனர்.
இதுபற்றிப் பேசிய தயாரிப்பாளர் பன்னி வாஸ், ”படத்தின் கதையை ஹைதராபாத்தில் உட்கார்ந்துகொண்டு வேலை செய்யக்கூடாது என்பதில் இயக்குநர் உறுதியாகவும், ஆர்வமாகவும் இருந்தார்.
மக்கள் மற்றும் சூழலை ஆய்வு செய்து இந்த படத்தின் முன் தயாரிப்பை கவனத்துடன் முன்னெடுத்துவருகிறோம்” என்றார்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி, ”இந்த கிராமத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு நிமிடத்தின் விவரங்களையும் உற்று கவனித்த பிறகுதான், எங்களின் முன் தயாரிப்புப் பணிகள் தொடங்குகின்றன” என்றார்.
நாயகன் நாக சைதன்யா, ”இந்த கிராமத்திலுள்ள கதாபாத்திரங்களை சந்திக்கவும், அவர்களின் உடல் மொழியை படிக்கவும், கிராமத்தின் நிலவியல் அமைப்பை அறிந்து கொள்ளவும், அவர்களின் வாழ்க்கை முறையை புரிந்துகொள்ளவும் நாங்கள் இங்கு வருகை தந்திருக்கிறோம்” என்றார்.
இந்த முழு பயணமும் ‘தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்’ எனும் பெயரில் ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது ஒரு அற்புதமான பயணம் என்றுதான் சொல்ல வேண்டும்.