பிரேசில் நாட்டின் கடற்கரை ஒன்றில் ஒதுங்கிய டால்பினின் வாயில் வாட்டர் பாடிலின் மூடி. எதையும் உட்கொள்ள முடியாமல் கரையில் கிடந்தது, காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்டது.
கடந்த வருடம் இந்தோனேஷியாவில் இறந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து ஆறு கிலோ ப்ளாஸ்டிக் எடுக்கப்பட்டுள்ளது.
ஜெயமோகன் எழுதிய யானை டாக்டரில் வரும் கண்ணாடி பாட்டில்கள் உடைப்பது உங்கள் நினைவிற்கு வரலாம்.
கடற்கரைக்கு செல்கின்றோம் ஏராளமான கழிவுகளை விட்டுவிட்டு வருகின்றோம். கடலுக்குள் ஏராளமான பிராணிகள் வாழ்கின்றன.
அதனை நினைவில் கொள்வோம். கடலுக்குள்ளும் நதிகளுக்குள்ளும் நீர் நிலைகளுக்குள்ளும் இன்னும் இன்னும் ஏராளமான கழிவுகளை தள்ளிக்கொண்டே இருக்கின்றோம் எந்தவித கவலைகளும் இன்றி. நாம் இந்த நாளினை வாழ்ந்துவிட்டால் போது என நினைக்கின்றோம்.
இந்த உலகம் எல்லோருக்குமானது மனிதனுக்கானது மட்டுமில்லை என்பதனை ஆணித்தரமாக சொல்லிக்கொடுங்கள்.
– நன்றி: விழியன்