சாம்பாரையும், போளியையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

சாம்பார் – கிட்டத்தட்ட தமிழர்களின் உணவு வகையிலும், திருமண விழாக்களிலும் தவிர்க்க முடியாமல் இடம் பெறும் ஒரு குழம்பு வகை.

இதை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மராட்டியர்கள்.
குறிப்பாக அப்போதைய தஞ்சை மராட்டிய மன்னரான சாம்போஜி.

பருப்பு எல்லாம் போட்டு வித்தியாசமான கலவையாக அன்று உருவான சாம்பாரின் சுவை எல்லோருக்கும் பிடித்துப் போக, சாம்பாரின் மணமும், சுவையும் பரவிவிட்டது.

அதைப் போலவே ‘போளி’ யையும் அறிமுகப்படுத்தியவர்கள் மராட்டியர்கள்தான்.
சாப்பிடத் தெரிந்த எங்களுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்கிறீர்களா?
இவை எல்லாம் – ருசி மூலங்கள்!

You might also like