கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘கிரிமினல்’!

கௌதம் கார்த்திக் – சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒட்டுமொத்த படக்குழுவும் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் மூலம் வர்த்தக வட்டாரங்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது.

இதனை அடுத்து பூஜையுடன் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் படத்தை எழுதி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர், டிரைலர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vels
You might also like