நெகிழ வைத்த குடியரசு தின விழா நிகழ்ச்சி வர்ணணை!

-டோஷிலா உமாசங்கர்

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகளைப் பெற்றி சுவையாக எழுதியுள்ளார் டோஷிலா உமாசங்கர்.

இன்றைய குடியரசு தின விழாவினை தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. அரசு நிகழ்ச்சிகள் பொறுத்த வரையில் நேரம் தான் எல்லாம்.

வர்ணனை என்பதை தாண்டி running commentary என்றே அழைக்கப்படும் முக்கிய விழா குடியரசு தினம், மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கொடி திறப்பு, சுமார் 49 ராணுவம் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு, 

பள்ளி கல்லூரி கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாரணர் படையினரின் அணிவகுப்பு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விருதுகள் வழங்கும் விழா,

துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் என நிறைய வேலைகள் மற்றும் துரிதமாக செயல்படக்கூடிய சவால்கள் அடங்கியது இந்நிகழ்ச்சி.

உறக்கமற்ற இரவுகளைக் கடந்து நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது மகிழ்ச்சி.

உடன் தொகுத்து வழங்கியவர்கள் நண்பன் Mass Prannav sweetheart Gitanjali Madhurasekaran and lovely Shanthi Jagathrakshakan Mam விழாவில் ஒலித்த பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் பாடலுக்கு இசை அமைத்தவர் Srikanth Deva.

நடுவில் கடந்த வாரம் முழுக்க தலைமைச் செயலகத்தில் இந்த நிகழ்வுக்கான தயாரிப்பு பணிகள், Prime video விற்கான எழுத்துப் பணி,

நேற்றைய Spotify Level up Indian podcasters workshop (இது நிரந்தர பணி அதனால் எக்காரணம் கொண்டும் கற்பது நிற்கக்கூடாது) ஒரு காதில் ear pod மாட்டிக்கொண்டு வகுப்பை கேட்டுக்கொண்டே மறுபுறம் ஒத்திகையில் பேசிக்கொண்டு திருத்தங்கள் மேற்கொள்வது, வானொலி சிறப்பு நிகழ்ச்சி பதிவு செய்தல் என சுழன்று கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது.

You might also like