ஹீரோவுடன் நெருக்கமாக நடித்தது ஏன்?

ஜீவி பட நாயகி அஸ்வினி விளக்கம்

2019-ல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ஜீவி. வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார்.

தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் ஜீவி-2 என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று ஆஹா ஒடிடி தளத்தில் வெளியானது.

முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என பலரும் இந்தப் படத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

குறிப்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இயல்பாக நடித்துள்ள நாயகி அஸ்வினி சந்திரசேகருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

அஸ்வினி சந்திரசேகர் பெங்களூருவை சேர்ந்தவர். ஆர்க்கிடெக் படித்திருந்தாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்குள் நுழைந்தவர்.

ஜீவி-2 படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி மனந்திறந்து பேசியுள்ளார் அஸ்வினி சந்திரசேகர்.

“முதல் பாகத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என படத்தில் நடித்த சமயத்தில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. அதிலும் இரண்டாம் பாகம் உருவாகும் என்றெல்லாம் நினைத்தே பார்க்கவில்லை..

எல்லாம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. முதல் பாகத்தில் பணியாற்றிய அதே டீம் என்பதால் ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது.

நாயகன் வெற்றி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ‘நீ நீ போதுமே’ என்கிற பாடலில் நாயகனுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்துள்ளீர்களே என பலர் கேட்கின்றனர்.

அது கதைக்கு தேவையாக இருந்தது. தவிர வலிந்து திணித்தது போன்ற காட்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை.

இந்த இரண்டாம் பாகம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம்தான்.

அதேநேரம் ஓடிடியில் ரிலீஸானாதால் உலகம் முழுக்க அதிக அளவிலான ரசிகர்கள் படத்தை பார்த்திருக்கிறார்கள் என நினைக்கும்போது மகிழ்சியாகவும் இருக்கிறது” என்று வெளிப்படையாகப் பேசுகிறார் அஸ்வினி சந்திரசேகர்.

பா. மகிழ்மதி

You might also like