– ராகுல் காந்தி எச்சரிக்கை
பாட்னா, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
பல இடங்களில் ரெயில்களை மறித்தனர். பீகார், மொகியுதிநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதே போல தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளை மறித்து, டயர்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
உத்தரப்பிரதேசத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வேலையற்ற இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம்.
பதவி இல்லை, ஓய்வூதியம் இல்லை, இரண்டு ஆண்டுகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை, ராணுவத்திற்கு உரிய மரியாதை இல்லை.
பிரதமர் அவர்களே, நாட்டின் வேலையற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள். அவர்களை அக்னிப் பாதையில் நடக்க விட்டு, அவர்களின் பொறுமை மீது அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.