சாகித்திய அகாதமி விருது பெறும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்!

‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ எனும் சிறுகதைப் படைப்பிற்காக, 2021ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பை அவர்களுக்கு தாய் இணைய இதழ் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறகுகள் முறியும், காட்டில் ஒரு மான், அம்மா ஒரு கொலை செய்தாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, உடலெனும் வெளி போன்ற சிறப்புமிகு படைப்புகளைத் தமிழுக்கு வழங்கியவர் அம்பை.

தனது எழுத்துகளின்வழி பெண்ணியச் சிந்தனைகளை கவனப்படுத்தி வரும் படைப்பாளர் அம்பை அவர்கள் இன்னும் பல உயரிய விருதுகள் பெற வாழ்த்துகள்!

அதேபோல், கவிதை, சிறுகதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் என 30 ஆண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர் மு.முருகேசுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின், ‛அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.

vels
You might also like