இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்!

– முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக  உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த அவர், இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், இமயமலை பகுதிகளில் எல்லையைப் பாதுகாக்க அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இன்னும் முகாமிற்கு திரும்ப முடியவில்லை.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நம்பிக்கையின்மை மற்றும் சந்தேகம் அதிகரித்தல் ஆகியவை தடையாக உள்ளன” எனக் கூறியுள்ளார்.

vels
You might also like