நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளைக் கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக பள்ளிகளைத் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை. மழலையர், எல்கேஜி, யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும்” என அறிவித்துள்ளது.

vels
You might also like