தலைநகர் டெல்லியில் தமிழுக்கான முக்கியத்துவம்!

தலைநகர் டெல்லியில் மாநில துணை முதல்வரும், கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழுக்கான அகாடமியை நிறுவி புதிய கல்விக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது டெல்லி அரசு.

இந்த கல்விக் கூட்டத்தின் துணைத் தலைவராக டெல்லி தமிழ்s சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் டெல்லி கவுன்சிலருமான என்.ராஜாவை நியமித்துள்ளனர்.

இந்தக் கல்விக் கூடத்துக்கு விரைவில் இடம் ஒதுக்கப்படும் எனவும், கூடுதல் கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்படும் எனவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மணிஷ் சிஷ்சோடியா, “டெல்லி கலாச்சார ரீதியாக உயர்நிலையில் உள்ள நகரம். டெல்லியில் எல்லா மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள். பணியாற்றுகிறார்கள். இந்தப் பன்முகத்தன்மைதான் டெல்லியை உயிர்ப்புடன் வைத்துள்ளது. பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.

டெல்லியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், தமிழ்நாட்டின் கலாச்சாரம் கலைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். எனவே தமிழகத்தின் கலை மற்றும் கலாசாரத்தைப் பற்றி, டெல்லி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த அகாடமியை நிறுவியுள்ளோம்” எனக் கூறினார்.

அதன்பின் பேசிய ராஜா, “தமிழ் மொழிக்காக, இங்கு அகாடமி நிறுவப்பட்டுள்ளதற்கு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் அங்கம் வகிப்பதை கௌரவமாக கருதுகிறேன்” என்றார்.

04.01.2021 11 : 44 A.M

You might also like