அபூர்வமான சில கணங்கள்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 25 நம் எல்லோருடைய வாழ்விலும் நாம் கடந்து வந்த காலத்தில், சில கணங்கள் கனமானபடி நெஞ்சில் தங்கி இருக்கின்றன. சில கணங்கள் எப்போதுமே பசுமையும், குளிர்ச்சியுமாக நினைவில் மிதந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் அப்படிப்பட்ட கணங்கள்தான் நம்முடைய வாழ்வை உயிர்ப்பிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி எனக்குக் கிடைத்த அபூர்வமான கணங்களைப் பற்றிய சிறு பதிவு இது. பல எழுத்தாளர்களை நான் சந்தித்திருந்தாலும், அதில், குறிப்பிடத்தக்கவராக சுந்தர ராமசாமி அவர்களை சொல்ல வேண்டும். […]

பழநி முருகன் சிலையும் புலிப்பாணியின் சாபமும்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 24   ஆலயம் செய்வோம், அங்கே அனுமதி இல்லை; நீ அந்தக் கூட்டமே, இதில் அதிசயம் இல்லை.   1971-ல்  வெளிவந்த ‘சவாலே சமாளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் ஒரு பகுதி.   ஞானப்பழத்திற்காக அண்ணனிடம் போட்டியிட்டு, பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழநி மலை மீது முருகன் அமர்ந்ததெல்லாம் ‘திருவிளையாடல்’ காலத்துக் கதை.   சிலருக்கு இதைப் படிக்கும்போதே பின்னணியில் கே.பி.சுந்தராம்பாள் உச்சஸ்தாயில்  பாடும் “பழம் நீயப்பா” […]

எழுத்தையும், எழுதுகிறவனையும் நேசித்தவர்கள்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 23 பத்திரிகை உலகில் நான் நுழைவதற்கு முதல் காரணமாய் அமைந்தவர் நண்பரும், எழுத்தாளருமான ஜெயந்தன். மதுரையில் என்னுடைய 20 வயதில் நெருங்கிப் பழகிய அவர், குமுதம், ஆனந்த விகடன் போன்ற வெகுஜன பத்திரிகையில் நிறையவே எழுதிக் கொண்டிருந்தார். என்னுடைய 18-ம் வயதில் துவங்கி இலக்கிய சிறு பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தேன். தீவிரமான வாசிப்பு வசப்பட்டிருந்தது. அப்போதுதான் சென்னைக்கு சென்றுவந்த நண்பர் ஜெயந்தன் என்னிடம், “நண்பர் மாலன் ‘திசைகள்’ என்ற இளைஞர்களுக்கான […]

எழுத்துக்கு உந்துசக்தி அளித்தவர்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 22 எழுதுவதற்கு எங்கிருந்தெல்லாம் தூண்டுதல்களைப் பெற்றிருக்கிறோம்? – என்பதை மனதிற்குள் மீள்பார்வையில் பார்த்தால், ஊடக உலகிலும், எழுத்துலகிலும் எவ்வளவு பேர் ஆசான்களாக இருந்து நமக்கு வழிகாட்டியிகிறார்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் கிடைத்த சில பகிர்வுகள் மட்டும் இங்கே: பத்து வயது வாக்கில் சென்னைக்கு குடும்பத்துடன் வரும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அந்த பால்ய கால ஆச்சர்யத்தோடு சென்னையில் பல விஷயங்கள் என்னை ஈர்த்தன. அப்படி ஈர்ப்புக்குரிய ஒன்று சென்னை மவுண்ட் ரோட்டில் […]

இப்படியும் சில கடத்தல்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 20 நவீன உலகில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், இன்னும் ஆன்மீக மயமான கோவில்களுக்கு தமிழ்நாட்டில் தனி இடம் உண்டு. அதுவே ஒரு காலத்தில் “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு எங்கும் ஆயிரக்கணக்கான கோவில்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கென்று பல்வேறு விலைமதிப்பில்லாத சொத்துக்களும் கூடவே இணைந்திருக்கின்றன.  பிரிட்டிஷார் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களில் இருந்த அபூர்வமான நகைகள் பறிபோகி இருக்கின்றன. அப்போதே சிலைகளை […]

பசி நகர்த்திய அந்த நாட்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 19 எழுத்தாளர்களையோ, படைப்பாளர்களையோ, கலைப்படைப்பாளர்களையோ அவர்கள் வாழும் காலத்தில், உரிய மதிப்புக் கொடுத்தார்களா? என்கிற கேள்வியைத் தமிழ் சூழலில் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கால பாரதியிலிருந்து ‘எழுத்து’ இதழை நடத்திய படைப்பாளியான சி.சு.செல்லப்பா வரை பல எழுத்தாளர்களை எப்போதும் பற்றாக்குறையான வாழ்க்கையைத்தான் வாழ வைத்திருக்கிறது நம் தமிழ்ச் சமூகம். இது தொடர்பான இரு சம்பவங்கள் மட்டும் இங்கே… இலங்கையைச் சேர்ந்த தமிழின் நவீனப் படைப்பாளியாக கருதப்படும் பிரமிள் என்று […]