தோழர் ஆர்.மணி. திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்.
திருமணம் செய்துகொள்ளம்மால் தோழர்களின் குழந்தைகளுக்கு தாத்தாவாக, தோழர்களின் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து, 95 வயதை நிறைவு செய்த நிலையில் இயற்கை எய்தியிருக்கிறார் (31.08.2026) மகத்தான மனிதரான தோழர் ஆர்.மணி.
பொது வாழ்வுக்காகவே வாழ்ந்த ஆர்.மணி, தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணாக்கர்களின் கல்விக்காக வழங்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

அதன்படி, தோழர் ஆர்.மணி அவர்களின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், குடும்பத்தாரும் தோழர் ஆர்.மணி விரும்பத்தை நிறைவேற்ற துணை நின்றிருக்கிறார்கள்.
அன்புத் தோழருக்கு செவ்வணக்கம்…!
ச. கணேசன் M.C.
மாவட்டக்குழு உறுப்பினர்
இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி