நயினார் நாகேந்திரனின் ‘சென்ஸிடிவ்’ கேள்வி!

செய்தி:    குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி கோவிந்த் கமெண்ட்:  தமிழக முதல்வரான விஜய்யைப் பார்த்து இப்படியெல்லாம் கேட்க உரிமை பெற்றிருக்கும் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியைப் பார்த்து இதேமாதிரி கேள்வி கேட்பாரா?

எல்.முருகன் கேட்ட கேள்வியும் கேட்க மறந்த கேள்வியும்!

செய்தி:    தவெக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்குவது எப்போது?  – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி கோவிந்த் கமெண்ட்:  தவெக ஆட்சி அமைத்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு பொறுப்பாக பெண்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பதுப் பற்றி துல்லியமாகச் சொல்லியிருக்கிறார்! ஆனால், இதே மாதிரி தேர்தல் பரப்புரையின்போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் குறிப்பிட்ட தொகை போடப்படும் என்று பிரதமர் மோடி சொன்னதை மட்டும் ஏன் கேட்க மறந்து போனார்.

தவெகவின் வெள்ளை அறிக்கை உணர்த்துவது என்ன?

தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்றபோது, “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன்” என்று அறிவித்திருந்தார்.  அதைத்தான் இப்போது நிறைவேற்றியிருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன். அதேசமயம் சென்ற திமுக ஆட்சியில், இதேமாதிரியான வெள்ளை அறிக்கையை எதிர்க்கட்சிகள் கேட்டபோது, வெள்ளை பேப்பரை ஒருவர் தூக்கிக் காண்பித்த சம்பவமும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். தவெக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்திற்குள் எந்தெந்த துறைகளில், எந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது? எந்தெந்தத் துறைகளில் அரசியல் மொழியில் சொன்னால், எந்தளவுக்கு […]

போலித் தங்கம்: காவலரே சொன்னாலும் உஷார்!

குறைந்த விலையில் தங்கம் என ரூ.20 கோடி மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம்!

தவெக அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் வெளியேறுவோம். – விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பேச்சு.

விஜய் துவக்கி வைத்த எம்எல்ஏக்களுக்கான பயிற்சி முகாம்!

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் புதுமுகங்களாக இருப்பதால், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்றும் (16-ம் தேதி) நாளையும் (17-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கில் எம்.எல்.ஏ.க்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. பேரவை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான இந்தப் பயிலரங்கை முதலமைச்சர் விஜய், குத்துவிளக்கு ஏற்றி இன்று (16.06.2026) தொடங்கி வைத்தார். […]