பெண்கள் தனித்து வாழ்வது சவாலாக இருக்கிறது!

கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றது, தனித்து குழந்தைகளை வளர்க்கும் பெண்களின் பிரச்சினை, தலித் பெண்கள் மாநாடு, போரில்லா உலகம், 33% இட ஒதுக்கீட்டை நிர்பந்தித்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பெண்கள் குழு.. என பரபரப்பாக இயங்கும் மனிதி செல்வியிடம் பீட்டர் துரைராஜின் நேர்காணல்; பொது வாழ்க்கைக்காக ஆசிரியர் பணியை துறந்த மனிதி செல்வி, இந்த நேர்காணலில் பெண்கள் எதிர் கொள்ளும் பலவிதமான பிரச்சினைகளை அலசுகிறார். தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் […]

எதுவாக இருந்தாலும் மறக்க கத்துக்கோ!

பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசுக்கு நடிகர் நாகேஷ் செய்த அட்வைஸ். இளவரசுவின் கேள்வி: ‘இறந்தகால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு’ என்று ஒன்று படித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாகேஷின் பதில்: இல்லை இது தவறு. திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி போன்ற கேரக்டர்கள் எல்லாம் என்னை எங்கேயோ கொண்டு போயின. அதெல்லாம் இறந்த காலம். இப்போதெல்லாம் எனக்கு வேலையே இல்லை. ஆனால் நீயோ மாதத்துக்கு 15 நாட்களாவது ஷூட்டிங் சென்றுவிடுகிறாய். இப்போதைக்கு நீதான் என்னைவிட […]

இளையராஜா யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை!

கேள்வி : இளையராஜா – ராஜ்கிரண் கூட்டணி தமிழ் சினிமாவில் பிரமாதமான கூட்டணியாக அமைந்தது. இது எப்படி உருவானது? ராஜ்கிரண் பதில் : இளையராஜா அண்ணனைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. யாரிடமும் எந்த விதமான பாரபட்சமும் அவருக்குக் கிடையாது. ‘ராஜ்கிரணுக்கு நல்லா டியூன் போட்டுக் கொடுக்கணும், பாரதிராஜாக்கு நல்லா போடணும். வேறு யாருக்காவது நல்லா போடக் கூடாது’ அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. ஒரு காலகட்டங்களில் பத்திரிகைகளில் நீங்க சொன்ன விசயத்தையே எழுதினாங்க. ‘ராஜ்கிரணுக்கு […]

கோவை மண் தான் எனக்கு சொர்க்கம்!

வாசகரின் கேள்வி: சொந்த ஊரை விட்டு வெளியூரில் குடியேற விரும்பாத நீங்கள் சென்னையில் பிறந்திருந்தால் இன்னும் எவ்வளவோ உயரங்களை தொட்டிருப்பீர்கள். அது பற்றி என்றாவது வருத்தப்பட்டது உண்டா?  (அ.பேச்சியப்பன், இராசபாளையம்)   எழுத்தாளர் ராஜேஷ்குமார் பதில்:   சிறிது கூட வருத்தப்பட்டதில்லை. ஏனென்றால் திறமை எங்கே இருந்தாலும் சரி வாய்ப்புகள் அங்கே தேடி வரும் என்று நான் நினைத்ததுதான் காரணம்.   மறைந்த இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் என்னை கோவையில் சந்திக்கும் போதெல்லாம் தவறாமல் சொல்லும் வார்த்தை இது. […]

சிவாஜிக்கு ஜாதகம் கணித்துச்சொன்ன வெ.ஆ.மூர்த்தி!

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலத் திரை அனுபவம் கொண்டவரான வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய திரையுலக அனுபவங்களைப் பத்திரிகையாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து சில பகுதிகள். எனக்கும் சோ போன்று திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த திரைக்கலைஞர்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அதில், நான் கலந்து கொண்டு பேசியபோது, இப்படிச் சொன்னேன்.  “உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றும் வாழ்வில் நமக்கு முக்கியமான விஷயங்கள். இவற்றில் உடையான ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நான் அறிமுகமானேன். […]

இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்?

ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார். கீற்று […]