ரசனைக்குரிய காட்சி :
ருத்ரய்யாவின் இயக்கத்தில் 70-களில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’.
ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, சரிதா என்று பலர் நடித்திருந்தாலும் ஸ்ரீப்ரியாவின் கதாப்பாத்திரம்தான், இந்தப் படத்தை நகர்த்துகிற மையக் கதாபாத்திரம்.
படத்தில் ஸ்ரீப்ரியா படு கேஷுவலாக பேசும் வசனங்கள் அவ்வளவு ஷார்ப்பாக இருக்கும்.
“மத்தவங்கக்கிட்ட இருந்து தன்னை வித்தியாசமா காட்டுகிறதுதான் இப்ப ஒரு பேஷனா இருக்குல” என்று ஒரு காட்சியில் பளிச்சென்று சொல்லுவார் ஸ்ரீப்ரியா.
இன்னொரு காட்சியில் ரஜினி ஸ்ரீப்ரியாவை தொட்டதும் சட்டென்று ரஜினியின் கன்னத்தில் அரைவார் ஸ்ரீப்ரியா.
அப்போது ரஜினி இயல்பானபடி இப்படிச் சொல்லுவார்.
“தனியா இருக்குற ஒரு பெண்ணிடம் எப்படி ஒரு இளைஞன் நடந்துக்குவானோ அப்படித்தான் நானும் நடந்துக்கிட்டேன்.
அதுப்போலத்தான் தனியா இருக்குற ஒரு பெண் தன்னைப் பாதுகாக்க என்ன செய்வாளோ அதைத்தான் நீயும் செஞ்சு இருக்க” என்று நிதானமாக ரஜினி சொல்வார்.
இந்தக் காட்சி அப்போது மட்டுமல்ல இப்போதும் ரசிக்கத்தக்க ஒரு காட்சியாகவே இருக்கிறது.