ஒரு புள்ளியிலிருந்து பீறிடும் வண்ணக் கீற்றுகள்!

ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் பீறிடும் கீற்றுகள் போல, ஓரிடத்தில் ஒன்றாகப் பயின்றவர்கள் மீண்டும் கலைப்பார்வையோடு ஒன்றுகூடினால் எப்படியிருக்கும்.

பெண் வேடத்தில் அரசியல் நையாண்டி!

கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஓம் முத்துமாரி. பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர். அவர் கொலை சிந்து பாடினால் உக்கிரம் கொப்பளிக்கும். அவரைச் சந்திப்பதற்காக நானும் கோணங்கி நாலைந்து முறை திருவேங்கடம் சென்றிருக்கிறோம். டவுனிலிருந்து தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று ஆசையாக வரவேற்றுப் பேசிக் கொண்டிருப்பார். கல்குதிரை இதழ் ஒன்றில் அவரது பாடல்களைக் கோணங்கி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைத்தேடிப் போகும் போது […]

செவியில் புகுந்து சிந்தையில் உறையும் இசை!

லால்குடி என்ற ஊருக்கு இரண்டு பெருமைகள் உண்டு. ஒன்று, தியாகராஜ சுவாமிகளால் ‘லால்குடி பஞ்சரத்தினம்’ இயற்றப்பட்டது. மற்றொன்று, ஜெயராமன் என்னும் வயலின் மேதையை இசை உலகத்துக்கு கொடையாகக் கொடுத்தது. சத்குரு தியாகராஜ சுவாமிகளின் நேரடி சிஷ்யப் பரம்பரையில் வந்த ‘பல்லவி’ ராமய்யரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். திருத்தவத் துறை க்ஷேத்திரம் எனப்படும் லால்குடிக்கு சத்குரு தியாகராஜ சுவாமிகள் எழுந்தருளி ‘லால்குடி பஞ்சரத்தினம்’ எனும் பொக்கிஷத்தை இயற்ற வழிவகை செய்ததே இந்த ராமய்யர்தான்! தன்னுடைய தந்தை வி.ஆர். கோபாலய்யரையே […]

‘கிராமிய ஊர்’ ஒன்றை உருவாக்க வேண்டும்!

‘கிராமிய ஊர்’ என்று ஒன்றை உருவாக்க வேண்டும். அங்கே நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்?

ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார். கீற்று […]

கலவரச் சூழலுக்கு இடையே கச்சேரி நடத்தினோம்!

‘நாட்டுப்புறப் பாடல் பாடுபவர்’ என்பது மட்டுமின்றி, விஜயலட்சுமிக்கு வேறு பல முகங்களும் இருக்கின்றன. கணவரைப் போலவே, இவரும் பல்கலைக்கழகப் பேராசிரியை. சிறந்த பேச்சாளர். ஒருமுறை, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில், ‘சங்க இலக்கியமும் நாட்டுப்புறப் பாடல்களும்’ என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருக்கையில்… விழாவுக்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் மேடையேறியதும் உடனடியாகச் சுருக்கமாகப் பேசி முடிக்குமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால், இவரது பேச்சிலும் நாட்டுப்புறப்பாட்டிலும் லயித்துப்போன எம்.ஜி.ஆர், இவரைத் தொடர்ந்து பேசச்சொல்ல… விடாமல் இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார் […]