Browsing Category
கதம்பம்
நாம் எப்போது வெற்றியாளராவோம்?
படித்ததில் ரசித்தது:
எப்போதும் பதட்டமின்றி,
ஓய்வு நிலையிலிருங்கள்;
'எல்லாம் நன்மைக்கே' என்ற
கோட்பாட்டைக் கடைப்பிடியுங்கள்;
'எந்தப் பிரச்சினைக்கும்
தீர்வு காண்பேன்'
என்ற நிலையிலிருங்கள்;
சரியான புரிதல் வேண்டும்;
பிறரை அவருடைய
கோணத்தில்…
வாழ்வின் பெருமை உழைப்பில்!
தாய் சிலேட்:
உயர்ந்த லட்சியத்திற்காக
இடையறாது உழைப்பதில் தான்
ஒருவர் உயிர் வாழ்வதின்
பெருமை முழுவதும்
அடங்கி இருக்கிறது!
- பெர்னாட்ஷா
மாற்றங்களை ஏற்றுக் கொள்வோம்!
இன்றைய நச் :
உங்களுடைய வாழ்க்கையில்
மாற்றம் நிகழ்வதை உணருங்கள்;
ஏற்றுக் கொள்ளுங்கள்;
எதிர்பாருங்கள்!
- டெனிஸ் வைட்லி
எல்லோரிடமும் கற்றுக் கொள்பவனே அறிவாளி!
இன்றைய நச் :
உன்னதமாக இரு;
நல்லதையே செய்;
அன்பாகப் பேசு;
சந்தோஷத்தைக் கொடு;
எவன் ஒருவன் எல்லோரிடமும்
கற்றுக் கொள்கிறானோ,
அவனே அறிவாளி!
- டபிள்யூ.எச். ஆடன்
இலக்கும் உழைப்பும் வெற்றிக்குத் தேவை!
தாய் சிலேட்:
வெற்றி என்பது
ஒரு சதவிகித குறிக்கோள்,
99 சதவிகித உழைப்பால்
உருவாகக் கூடியது!
- தாமஸ் ஆல்வா எடிசன்
மன அழுத்தங்களைப் பறக்க விடு!
பல்சுவை முத்து:
நான் என்று உணர்;
தன்னைப் போல் பிறரை நினை;
உறவாட கற்றுக் கொள்;
உரையாட கற்றுக் கொள்;
எதையும் கேள்வி கேள்;
எதற்கும் பதில் கண்டுபிடி;
தெளிவான முடிவு எடு;
சிக்கல்களை அவிழ்;
உணர்ச்சிகளை உணர்ந்துகொள்;
அழுத்தங்களை லேசாக்கு;
படி;…
நம் மீது நம்பிக்கை தேவை!
இன்றைய நச் :
இன்பங்கள்
சேர்ந்து வருவதில்லை;
துன்பங்கள்
தனியே வருவதில்லை;
இயலாது என்றோ
முடியாது என்றோ
எதுவுமே இல்லை;
எல்லாவற்றிக்கும்
ஒரு அருமருந்து நம்பிக்கை;
உங்களை நம்புங்கள்!
- ஷேக்ஸ்பியர்
நல்ல கதை பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்!
திரை மொழி :
ஸ்பெஷல் எபெஃக்ட்களால்
பார்வையாளர்களை
மகிழ்விப்பது கடினம்;
ஆனால் நல்ல கதையால்
அவர்களை நிச்சயமாக
மகிழ்விக்க முடியும்!
- ஸ்டீவன் ஸ்பெல்பெர்க்
எண்ணங்களை செயல்படுத்துவதே வெற்றிக்கு வழி!
தாய் சிலேட்:
எண்ணங்களை
செயலாக்கும்
ஆற்றலே
வெற்றியாக
வளர்கிறது!
- வால்டேர்
நேசிப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்!
இன்றைய நச்:
அன்பு எங்கும் பரவும் தன்மையுடையது;
சுயநலம் எப்போதும் குறுகும் தன்மையுடையது.
வாழ்வின் வழி என்பது அன்புதான்;
எவர் பிறரை நேசிக்கிறாரோ, அவர்தான் வாழ்கிறார்;
எவர் ஒருவர் சுயநலமிக்கவராக வாழ்கிறாரோ
அவர் இறந்து கொண்டிருக்கிறார்;
எனவே…