Browsing Category
தினம் ஒரு செய்தி
நேர்மையின் உன்னதம்…!
இன்றைய 'நச்':
*
சாமானியமான மனிதர்களின்
நேர்மைக்கு முன்னால்
எந்தப் பிரபலமும்
உயர்ந்தவர்கள் இல்லை.
பிரபலமாவது ஒரு மாஜிக்!
இன்றைய நச்!
***
பிரபலமாவது ஒரு மாஜிக் மாதிரி தான்.
பிரபலமான பின்பு மற்றவர்களுக்கு உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கே உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாத மங்கலான பார்வை வந்துவிடும்.
இந்த நொடியை முழுமையாக வாழுங்கள்!
இன்றைய ‘நச்’!
***
நேற்றைய கவலையை விடுங்கள்;
நாளைய கனவையும் விடுங்கள்;
வாழும் இக்கணத்திற்கான
முழுமையான உணர்வோடு இருங்கள்.
கடந்து போகும் பட்ஜெட்!
இன்றைய 'நச்'
****
கொரோனா பலருடைய வாழ்வாதாரங்களை துளைத்து வெறுமையில் ஆழ்த்தியிருக்கும்போது, பெய்யா மழைமேகம் போல எதிர்கால புள்ளி விவரங்களுடன் நிகழ்காலத்தைக் கடந்து போகிறது மத்திய பட்ஜெட்.
மூடநம்பிக்கையின் பலம்!
இன்றைய ‘நச்’!
*
மூட நம்பிக்கை
பலருக்கு அழியக்கூடிய அழுக்கைப் போலிருக்கிறது;
சிலருக்கு அழியாத மச்சத்தைப் போலிருக்கிறது.
மனிதத்தோடு இருப்பவர்களின் நிலை?
இன்றைய ‘நச்’!
*
மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள் மத்தியில்
மனிதத்தோடு இருக்கிறவர்கள் தான்
குற்றவாளியைப் போல உணர நேரிடுகிறது.
சொற்களின் வீரியம்!
இன்றைய ‘நச்’!
***
கோபம் சொற்களில் ஏறினால்
வீரியம் ஏறி உச்சம் பெற்று விடுகிறது..
மௌனமானாலோ சறுக்கி விடுகிறது...
27.01.2022 10 : 50 A.M
நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுற்றுலா!
சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல…
பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்!
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சமஉரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி 'தேசிய பெண் குழந்தைகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், பெண் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…
முரண்பாடுகளின் குவியல்!
இன்றைய ‘நச்’!
****
பழகுகிற பலரிடமும்
சிறு சிறு முரண்பாடுகளைக்
கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறவன்
நிலைக் கண்ணாடியில் தெரியும்
தன் பிம்பத்துடன் கூட
முரணைத் தேடிக் கொண்டு தானிருப்பான்.