Browsing Category
கதம்பம்
மறைக்க முடியாத ஒளி போன்றது உண்மை!
தாய் சிலேட் :
உண்மை
ஊடுருவும் சூரிய ஒளி போன்றது;
அதை
யாராலும் மூடி மறைக்க முடியாது!
– மில்டன்
மனித ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் கல்வி!
இன்றைய நச் :
தனிமனிதர் வாழ்வை
இன்பமுடையதாகவும்
நன்மையுடையதாகவும்
மாற்றி அமைப்பதும்
வாழ்வாங்கு வாழ
வகுப்பதுமே கல்வி!
– பெஸ்டலசி
வரமாக வந்த வாழ்க்கை!
‘தாய்’ சிலேட் :
தம்மிடமுள்ள குறைகளை
நீக்கிக் கொள்வதே
நமக்கு ஏற்படக்கூடிய
பெரிய அதிர்ஷ்டமாகும்!
– கதே
நல்ல மனிதனை உருவாக்குவதே கல்வி!
இன்றைய நச்:
ஒரு குழந்தை கனவானாகவோ,
சீமாட்டியாகவோ இருக்கும்படி
செய்வது கல்வியல்ல;
நல்ல மனிதனாக
இருக்கச் செய்வதே கல்வி!
– ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
படிக்கப் படிக்கத்தான் அறியாமை நீங்கும்!
தாய் சிலேட் :
நாம் படிக்கப்படிக்கத்தான்
நம்மிடமுள்ள
அறியாமையைக்
கண்டு கொள்கிறோம்!
– கவிஞர் ஷெல்லி
அன்பான உறவுகளை அருகில் வைத்துக் கொள்வோம்!
தாய் சிலேட் :
உங்களுக்கு உதவக்கூடிய கரங்கள்
வேறெங்குமில்லை;
அவை உங்கள் தோள்களின் மீதுதான்
இருக்கின்றன!
– லிடர்மென்
அனைத்தும் நடக்கும் அதற்கான நேரத்தில்!
இன்றைய நச்:
மனமே பதற்றமடையாதே;
மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கம்;
தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும்
பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்!
– கபீர்தாசர்
உழைப்போம்; உயிர் வாழ்வோம்!
தாய் சிலேட் :
உயிருள்ளவரை
உழைத்து வாழ விரும்புவோம்;
உழைக்க உழைக்க
உயிர் வாழும் விருப்பம்
அதிகமாகும்!
– ஜார்ஜ் பெர்னாட்ஷா
இயங்கிக் கொண்டே இருக்கப் பழகுவோம்!
இன்றைய நச்:
பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து விடும்;
தேங்கிய நீர் தூய்மை இழந்துவிடும்;
சுறுசுறுப்பான செயல்பாடுகள்
கொண்ட மனம் தான் வலிமை தரும்!
– லியனார்டோ டாவின்ஸி
இரக்கத்தால் இயங்கும் உலகம்!
தாய் சிலேட் :
இரக்கத்தை
அறிந்தவன்
எல்லாம்
அறிந்தவன்!
– பிரெஞ்சு பழமொழி