Browsing Category
கதம்பம்
நாம் தான் கவலையை உருவாக்குகிறோம்!
படித்ததில் ரசித்தது:
அசைந்து கெட்டது மனம்;
அசையாமல் கெட்டது உடல்;
எது அசைய வேண்டுமோ
நாம் அதைச் செய்யாமல்
உடலை வளைக்காமல்
நோயைக் கொண்டு வருகிறோம்;
அசையாமல் வைக்க வேண்டிய மனதை
யோசனை என்ற பெயரில் சிந்தித்து சிந்தித்து
முக்கியமான…
கல்வியின் பயன் என்ன?
இன்றைய நச் :
கல்வி ஒரு மூட்டை நூல்களை
வாசிப்பதல்ல;
அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி
ஆகியவற்றை சொல்லித் தருவதாகும்.
– எட்மண்ட் பர்க்
உருண்டோடும் வாழ்க்கை!
தாய் சிலேட் :
மனித வாழ்வு என்பது
இலையில் உருண்டோடும்
பனித்துளி போன்றது!
– தாகூர்
அறிவைப் பெருக்கும் ஆயுதம்!
தாய் சிலேட் :
அறிவைப் பெருக்கும்
படைக் கருவிகளை
நான் நூலகங்களிலிருந்தே
பெற்றுக் கொள்கிறேன்!
– இங்கர்சால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அநீதி!
இன்றைய நச் :
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான்:
"திருடன் திருடன்" என்று கத்தினேன்;
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக
என்னைக் கைது செய்து விட்டார்கள்!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
சான்றோரை மதித்தலே உயரிய பண்பு!
இன்றைய நச் பகுதி:
சான்றோர்க்கு
அளிக்கும் கௌரவம்
இறைவனுக்குச் செய்யும்
மரியாதையாகும்!
– நபிகள் நாயகம்
நூல்களே எனக்குப் பெருஞ்செல்வம்!
தாய் சிலேட் :
எனது நூலகமே
எனக்குப் போதிய
பெருஞ்செல்வம்!
– ஷேக்ஸ்பியர்
நல்லவர் என்றும் கெடுவதில்லை…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
(தர்மம் …)
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்…
தற்பெருமை தான் முதல் எதிரி!
இன்றைய நச் :
தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு
வேறு விரோதிகளே தேவையில்லை!
– ஃபிராங்கிளின்
ஒரே ரசனையுள்ள நட்புக்கு இணை எதுவுமில்லை!
தாய் சிலேட் :
ஒரே புத்தகத்தை ரசிக்கும்
இருவருக்கிடையே மலரும்
நட்புக்கு இணையானது
எதுவும் இல்லை!
– இர்விங் ஸ்டோன்