Browsing Category
கவிதைகள்
நம்பிக்கையைக் குலைத்தவன்!
தூரத் தொலைவில்
அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி
இங்கு வரக்கூடுமெனத்
திடுக்கிட்டேன்.
வேறு யாரோ...
அப்படி எண்ணாதிருந்தால்
அவனே வந்திருப்பான்.
- சுந்தர ராமசாமி
அறை முழுவதும் நிரம்பியிருக்கும்…!
இந்த அறையில்
கொல்லப்பட்ட மனிதனின்
ரத்தக் கறைகளை கழுவ
எனக்கு
ஒரு பக்கெட் தண்ணீர் போதும்;
இந்த அறையில் ஒரு மனிதனை
நிராகரித்துச் சென்ற
ஒருவரின் பிம்பங்களைக்
கழுவ எனக்கு
ஒரு பக்கெட் ரத்தம் வேண்டும்!
மனுஷ்யபுத்திரன்
தமிழுக்கு ஏன் இந்த மாற்றம்…!
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்று
தமிழிலே பெயர் வைப்பார்
எத்தனை பேர்?
அர்ச்சனை சீட்டுக்கள்தான்
தமிழில் உள்ளனவே தவிர
அர்ச்சனைகள் அல்ல.....
சமஸ்கிருதத்தில் பேசினால்தான்
சாமிக்கே புரியுமென்று
தேவாரம் திருவாசகத்தை
பழைய கடைக்குப் போட்டுவிட்டான்…
எல்லா நேரமும் யாரோவாக இருக்க இயலாது!
நான் அப்பாவாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் மகனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் கணவனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் அண்ணனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
நான் நண்பனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன்
மாமாவாக
மருமகனாக
குருவாக
சீடனாக
கவிஞனாக
எழுத்தாளனாக…
பிரிவாற்றாமை…!
ஒரு பென்சிலைச் சீவுவதுபோல
ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில்
நகர்த்துவதுபோல
ஒரு புத்தகத்தின் 167ஆம் பக்க ஓரத்தை
மடிப்பதுபோல
ஒரு பழைய பயணச் சீட்டை கசக்கி
எறிவது போல
ஒரு தீக்குச்சியை வெறுமனே
கொளத்துவதுபோல
ஒரு அலைவரிசையிலிருந்து
இன்னொரு அலைவரிசைக்கு…
நிராகரிப்பின் வலி…!
தினம் ஒரு புத்தக மொழி
நிராகரிப்பின் வலி
என்றெல்லாம்
ஒன்றுமில்லை...
அதில் ஒரு சிறிய
அவமானம்
இருக்கிறது.
அதற்கு மட்டும்
பழகிக் கொண்டால்
போதும்.
- மனுஷ்யபுத்திரன்
குட்டி குட்டி வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட வண்ண மாலை!
பிருந்தா சாரதியின் ‘பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்’ நூல் விமர்சனம்
இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி அவர்களிடம்தான் முதன் முதலாக நான் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன்.
ஜேடி - ஜெர்ரி ஆகியோரில் ஜேடி எனப்படும் ஜோசப் டி சாமி அவர்கள் கும்பகோணத்தைச்…
வடிவேலு வெளியிட்ட கவிதைத் தொகுப்பு!
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட.
அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற…
மக்களே திருந்திக் கொள்கிறார்கள்!
தடைச் சட்டங்கள்
மிகுதியாக ஆக
மக்கள்
மேலும் மேலும் வறுமையடைகிறார்கள்.
கூர்மையான ஆயுதங்கள்
குவியக்குவிய
நாட்டில் குழப்பம் பெருகிறது.
தொழில் நுணுக்கம்
வளர வளர
வஞ்சகப் பொருட்கள்
மிகுதியாகின்றன.
சட்டங்கள் பெருகப் பெருகத்
திருடர்கள்…
அன்பை இழந்துவிட மனமில்லை!
ஒரு கவிதையை எழுதி முடிக்கும் வரை என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது. ஆக, தற்கொலையைத் தவிர்க்கவே தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
இந்த மழையை நான் விரும்புகிறேன், என்னை சில்லிட நனைக்கிறது. இந்த மழையை நான் விரும்புகிறேன், என்…