Browsing Category
கவிதைகள்
ரவீந்திரநாத் தாகூரும் சத்யஜித் ராயும்…!
சத்யஜித் ராய் சிறுவனாக இருந்த போது ராயின் தாய் அவரை தாகூரிடம் அழைத்துச் சென்றார். தாகூரின் கையெழுத்து கேட்டார் ராய். கையெழுத்து வாங்கும் நோட்டை மேசை மேல் வைத்து விட்டு ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார் ரவீந்திரர்.
ஒரு வாரம் கழித்து ராய்…
மிகை சமுதாயத்திற்கும் ஆபத்து!
*
தடைச்சட்டங்கள்
மிகுதியாக ஆக
மக்கள்
மேலும் மேலும் வறுமையடைகிறார்கள்.
கூர்மையான ஆயுதங்கள்
குவியக் குவிய
நாட்டில் குழப்பம் பெருகுகிறது;
தொழில் நுணுக்கம்
வளர வளர
வஞ்சகப் பொருட்கள்
மிகுதியாகின்றன;
சட்டங்கள் பெருகப் பெருகத்…
காகிதத்தில் ஒரு கோடு!
ஆத்மாநாமின் கவிதை
*
பெங்களூரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகச் சொல்லப்படும் மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆத்மாநாமின் முதல் கவிதைத் தொகுப்பு 1981-ல் வெளியாயிற்று. அதிலிருந்து ஒரு கவிதை.
தலைப்பு : ’காகிதத்தில் ஒரு கோடு’
*…
உயிர் பிழைத்திருப்பதன் நிகழ்தகவு!
ஆளில்லா ரயில்கேட்டை
அமைதியாக கடந்துகொண்டிருக்கிறது
ஒரு அட்டைப் பூச்சி
மூடுபனி திரைகள் விலக்கி
மெதுவாக ஊர்ந்து வருகிறது ரயில்
ஆளில்லா ரயில் கேட்டை
அமைதியாக கடந்து கொண்டிருக்கிறது
ஒரு அட்டைப் பூச்சி
நகரும் சன்னலோரம் அமர்ந்த சிறுமி
விடலிப்…
காலத்தின் மீது நம்பிக்கை தேவை!
பல நெருக்கடிகளுக்கிடையில் மனச் சோர்வு அடையும்போது, நம்பிக்கையூட்டும் இந்தக் கவிதை வரிகளை வாசியுங்கள்.
மனதிற்குள் சிறு நம்பிக்கை நாற்றைப் போலத் துளிர் விடும். காலத்தின் மீது நம்பிக்கை வரும். “இதுவும் கடந்து போகும்” என்ற யதார்த்தம்…
நவீன இலக்கியவாதிக்கு…!
*
தெரியும் உனக்கு
நிறைய வார்த்தைகள்.
கைகளை உதறினால் போதும்
எழுத்துக்கள் சிந்திவிடும்.
மூளை மேயப்போவது
பிரபஞ்ச சிந்தனை ரேகையில் தான்.
ஆனாலும் இன்னொரு மூளைக் காரனின்
ஒவ்வொரு புதுக்காலடி கீழும்
ஓடிப் பதறும் உன் மனசு.
மனசின் வக்கிரம்…
தாயும் நீ… தந்தையும் நீ…!
அக்னிக் குஞ்சாய்
ஆங்கொரு பொந்திலே வைத்த தீ
மூண்டது வீரமாய்
வெள்ளை ஆட்சிக்கு ஆனது
பாராமாய்...
அந்த
பாஞ்சாலி சபதத்து
பாட்டினில் வைத்த தீ
பற்றி எரிந்தது வேகமாய்
நெஞ்சில்
தணியாத சுதந்திர
தாகமாய்..
வீட்டுக்குள்ளே பெண்ணை
பூட்டிடும் விந்தையை…
பிம்பங்கள் சூழ் உலகு!
லாவகமான பொய்களால்
நம்மால் கட்டமைக்கப்படும்
பிம்பங்கள்
காற்றினால் ஊதப்பட்ட
பலூன்கள் மாதிரி தான்.
எந்தக் கண அழுத்தமும்
கூர் ஊசியாய் அந்தப் பிம்பத்தை
உடைத்துவிடலாம் தான்,
இருந்தும்
சளைக்காமல்
நம்மைச் சுற்றி
எத்தனை
நுரைக்குமிழிப் பிம்பங்கள்!…
கார்காலப் பரிசு…!
மழைத் தூறல்களின் இடைபுகுந்து
பறந்து வந்த ஒரு மஞ்சள் வண்ணத்துப் பூச்சி
என் குடைக்குள் இடம் தேடி நுழைந்தது
வண்ணக் குடையை மலரெனவும்
குடை ஏந்தி நடக்கும் என்னை
காற்றிலாடும் செடியெனவும்
அது கண்டிருக்கக் கூடும்
தூறல் தூவா குடை எல்லையை…
உணர்த்த மறந்த ஒன்று!
அடர் மழைப் பொழுதில்
காலத்தில் இருந்து விழும் சொட்டாய்
நண்பனின் மரணம்.
நாற்பத்தைந்து வயது தாண்டுவதற்குள்
குளிர்ப்பெட்டியில் உறைந்திருந்தான்.
இருந்தும் மாலைகளை மீறிய மரண நெடி.
கடைசி நேரத்திய அவனின் முகச் சலனத்தை
உணர முடியவில்லை.…