நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்த விஜயகுமாரி, சிவாஜிக்குத் தங்கையாகவும் நடித்திருக்கிறார். ‘ராஜராஜ சோழன்’ படத்தில் ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், சிவாஜியின் குடும்பத்தைப் பற்றி மனம்திறந்து பேசியிருந்தார் விஜயகுமாரி.
“நடிகர் திலகம் சிவாஜி அவர்களை அவரது மனைவியான கமலாம்மாள் கவனித்துக் கொள்கிற விதமே அவ்வளவு பாசத்துடன் இருக்கும்.
மாலை வேளைகளில் சிவாஜி வீட்டிலிருந்தால், அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்து அவரை கவனித்து பணிவிடைகள் செய்து பேசிக்கொண்டிருப்பார்.
இரவு நேரத்தில் வெள்ளை நிறத்தில் சேலை கட்டியிருப்பார். காலையில் குளித்துவிட்டு மஞ்சள் கலரில் சேலையணிந்துபடி நடிகர் திலகம் அவர்களுடன் அவர் மாடியிலிருந்து கீழே இறங்கி வரும்போது அவரைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
நடிகர் திலகம் வெளியே காரில் செல்லும்போது, கமலாம்மாவை அழைத்து சிறிய டம்ளில் மோரை வரவழைத்து அதை ரசித்துக் குடித்தபிறகே வெளியே கிளம்புவதை வழக்கமாக வைத்திருந்தார் சிவாஜி.
அவர்களுக்கிடையிலான பாசத்தை நேரடியாக பார்க்கிறபோது, அந்தக் காட்சி பார்க்கிறவர்களை சிலிர்க்க வைக்கும்படி இருக்கும். அப்படியொரு பாசப்பிணைப்பான குடும்பம் சிவாஜியுடையது.”
– என்று தன்னுடைய பல்வேறு அனுபவங்களை சற்றும் நினைவு பிசாகாமல் இந்தப் பேட்டியில், பேசியிருக்கிறார் பழம்பெரும் நடிகையான விஜயகுமாரி.