செய்தி:
ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு அனுப்புவேன்.
– ஜி-7 மாநாட்டுக்கு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
கோவிந்த் கமெண்ட்:
சில மாதங்களுக்கு மேல் தொடர்ந்து நடந்துவந்த மேற்காசியப் போர் ஒரு வழியாக முடிவடைய இருக்கிறது.
அமெரிக்காவும் ஈரானும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இஸ்ரேல் மட்டும் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளாமல் தன்னுடைய நிலைப்பாட்டோடு, தனித்திருக்கிறது.
அதேசமயம், டிரம்ப் இந்த சமாதான ஒப்பந்தத்திற்கு வருவதற்கான அசலான காரணம், வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் தேர்தல் வரவிருக்கிறது.
ஏற்கனவே, ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கிற இழப்பும் பொருளாதாரப் பின்னடைவும் அமெரிக்க மக்களிடையே டிரம்புக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.
அந்த உணர்வை தவிர்ப்பதற்காகவே ஈரானுடன் சமாதான ஒப்பந்தத்திற்கு இசைந்திருக்கிறார் டிரம்ப்.
இதனால் அவருக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பலன் ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.