விஜய்யை எடை போடுகிறதா பாஜக?

செய்தி:

விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் தான் நிலைத்து நிற்க முடியும்: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து.

கோவிந்த் கமெண்ட்:

தவெக தலைவரான விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என தற்போது சொல்கிற பாஜகவின் வாதம் ஓரளவு சரியானதுதான். ஆனால், இதற்கு முன்பு பாஜக தரப்பில் விஜய்க்கு இவ்வளவு குடைச்சல் கொடுக்கப்பட்டது ஏன்?

எத்தனையோ திரைப்படங்களுக்கு உடனடியான சான்றிதழ் கிடைத்த நிலையில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை கெடுபிடிகள்?

அவர் பாஜக கூட்டணியில் இணையப் போகிறார் என்கின்ற பேச்சுவார்த்தை நடப்பதான ஒரு செய்தியை பொதுவெளியில் பரப்பி, நயினார், தமிழிசை உட்பட பலர் விஜய்க்கு வெளிப்படையான அழைப்பும் கொடுத்து, பிறகு ஏதோ ஒரு காரணத்தால் பின்வாங்கி இருக்கிற பாஜக, இத்தகைய பேச்சை மிகவும் காலதாமதமாக சொல்கிறது என்பது தான் உண்மை.

விஜய் மீது உண்மையாகவே பாஜகவுக்கு அக்கறை இருக்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்வி.

 
You might also like